Sorry, you need to enable JavaScript to visit this website.
Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

img

குழந்தைகளை பிரச்சனைகளை அறியாத மகிழ்ச்சியானதோர் உலகின் உறவுகளாகவே நாம் அர்த்தப்படுத்துகின்றோம். சில சமயங்களில், 'ஐயோ, நான் மீண்டும் என் குழந்தைப் பருவத்திற்குச் செல்ல விரும்புகிறேன்' என நமக்கு நாமே சொல்லிக் கொள்வதும் இதனாலேயே. இது உண்மைதான். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும், ஆற்றலுடனும், கவலையின்றியும் இருப்பதை காண்கிறோம். இருப்பினும், பெரியவர்கள் நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் கவலைகள் மற்றும் பிரச்சினைகளின் தாக்கம் குழந்தைகளுக்கு இருக்கும் என்பதும் உண்மைதான். இவ்வாறான எண்ணங்களும் அனுபவங்களும் குழந்தைகளிதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு அதிக ஆதரவு தேவை

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மன அழுத்தம் நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் எதிர்கொள்வதே. இருப்பினும், சில அனுபவங்கள் அல்லது சம்பவங்களால் ஏற்படும் மன அழுத்தத்தின் அளவு, அவர்களுக்கு நேர்மறையான முறையில் பதிலளிக்கும் திறனைத் தாண்டிச் செல்லக்கூடிய சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். பேச்சு மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு போன்ற பல திறன்களை இன்னும் வளர்த்துக் கொள்ளாத மிகச் சிறிய குழந்தைகளையும் கூட மன அழுத்தம் பாதிக்கலாம் என்பதால், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் இக்கால பகுதியில் பெற்றோராகவும் அவர்களைப் பராமரிப்பவர்களாகவும் நமது உதவி கண்டிப்பாக அவசியம்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியவற்றை அறிந்து கொள்வதன் மூலமான தடுப்பு நடவடிக்கைகள்

குழந்தைகளுக்கு அன்பையும் பராமரிப்பையும் வழங்கும் பெரியவர்கள் என்ற முறையில், மன அழுத்தத்தின் காரணிகளை கண்டறிவது, குழந்தைகள் தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்புகளைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். தடுப்பு எப்போதும் முக்கியமானது. பொதுவாக, பயம் அல்லது கவலை உணர்வுகளை அதிகமாக உணரும் ஒரு நபரின் பிரதிபலிப்பாக மன அழுத்தத்தை அடையாளம் காணலாம். குழந்தைகளுக்கு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை வெளிப்புற மற்றும் உள் காரணங்களாகவும்; இருக்கலாம்.

முதன்முறையாக பெற்றோரை விட்டு பிரியும் போது குழந்தைகள் கவலை அடைகின்றனர். பள்ளி வேலைகளுக்கான தேவை, பள்ளியில் அல்லது நண்பர்களுடனான பிரச்சனைகள், வழக்கமான மாற்றங்கள், குடும்பம் அல்லது பள்ளியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அவர்களுக்கு மன அழுத்த காரணிகளாக இருக்கலாம். முதல் முறையாக பள்ளிக்குச் செல்வது அல்லது புதிய இடத்திற்குச் செல்வது போன்ற சில காரணிகள் குழந்தைகளின் இயல்புக்கு எதிர்மறையாக இல்லாவிட்டாலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அமையும்.

img

குழந்தைகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் அனுபவிக்கும் விடயங்களைப் பற்றி ஆர்வமாக இருக்கும்போது, அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும்; அவர்கள் பார்க்கக்கூடிய அல்லது கேட்கக்கூடிய விடயங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் சண்டையிடுவது, வாக்குவாதம் செய்வது அல்லது வேலையில் இருக்கும் பிரச்சனைகள், நண்பர்கள் அல்லது உறவினர்களின் பிரச்சனைகள் பற்றி பேசுவது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பெற்றோர்கள் கவலைப்படும் விடயங்களைப் பற்றி குழந்தைகள் கவலைப்படுவது இயற்கையானது. அதே சமயம், பிள்ளைகள் மன உளைச்சலை ஏற்படுத்தும் படங்கள், காணொளிகள், செய்திகள் அல்லது அதுபோன்ற ஏதாவது ஒரு விடயத்திற்கு ஆளாக நேரிடும் போது, தமக்கோ அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுக்கோ இது நடக்குமோ என்று பயப்படுபவர்களைப் பற்றி தொடர்ந்து சிந்தித்து கவலைப்பட்டால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

குழந்தைகளில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து சூழ்நிலைகளையும் தடுக்க முடியாது. இருப்பினும், பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எளிய விடயங்களைப் பற்றி அறிந்திருப்பது முக்கியம், இதனால் குழந்தைகள் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்ள குழந்தைகளை முன்கூட்டியே தயார்படுத்தலாம். இதில் நமது ஆதரவும் புரிதலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் உணர்வுகளை அங்கீகரிப்பது, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் ஆதரவாக பேசிடல்; ஆகியவை மன அழுத்தத்தை குறைத்து அத்தகைய சூழ்நிலையை கடந்து செல்ல அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க நிச்சயமாக உதவியாக இருக்கும்.

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலிருந்தே குழந்தைகளுக்கு சமாளிக்கும் திறன்களை வளர்ப்பதற்கு உதவுவது மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாகும். சிக்கலைத் தீர்க்கும் திறன், மீண்டுவரல் மற்றும் நெகிழ்வினை ஊக்குவிக்கும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் அவர்களை ஈடுபடுத்துதல் ஆகியவை குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்க உதவுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர்களை மிகவும் வேலைப்பளுவாக்காது இருக்க பெற்றோர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் அவர்கள் முன்னணியில சுதந்திரமாக விடயங்களைச் செய்வது, கல்வி மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளைப் போலவே முக்கியமானது.

குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கும்போது நடத்தை மற்றும் உடல் ரீதியான மாற்றங்களைக் உணர்கின்றனர்;. பெரும்பாலான சூழ்நிலைகளில், பெற்றோர்கள் இத்தகைய பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்கு ஆதரவளிக்கும் திறன் மற்றும் சூழ்நிலைகளை மிகவும் நம்பிக்கையுடன் கையாள உதவிடவேண்டும். இருப்பினும், தங்கள் குழந்தைக்கு கூடுதல் உதவி தேவை என்று பெற்றோர்கள் கருதும் சந்தர்ப்பங்களில், மேலும் தாமதிக்காமல் தங்கள் குழந்தைக்கு உதவ நிபுணத்துவ ஆலோசனையைப் பெறுவது பொருத்தமானது. குழந்தையுடன் சிறந்த புரிதல் மற்றும் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது, சாத்தியமான அனைத்திற்கும் தீர்வுகளை வழங்குவது கட்டாயமானதாகும.

குறிப்புகள்:

  • குழந்தைகள் உள் மற்றும் வெளிப்புற காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
  • குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்ப்பது முக்கியம்.
  • சில சூழ்நிலைகள் தவிர்க்க முடியாதவை மற்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தைகளுக்கு ஆதரவாகவும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
  • உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உறவைப் பேணுவது அவர்களின் மனநலத்தைப் பேணுவதற்கு அவர்களுக்கு உதவுவது முக்கியம்.
  • மன அழுத்தத்தை நேர்மறையாக எதிர்கொள்ளும் திறன்களை வளர்க்க அவர்களுக்கு உதவுங்கள்.

Recommended Articles